புதன், 7 செப்டம்பர், 2011

ஏரல், செப்.7&


ஏரல், செப்.7&
ஏரல் அருகே உள்ள பெருங்குளம் தெற்கு பிள்ளைமார் தெருவைச்சேர்ந்த சுந்தரம் மகன் முருகன்(37). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவர் மேலும் ஒரு லாரி வாங்க முடிவுசெய்தார். இதற்காக கடந்த மாதம் 5ம்தேதி தூத்துக்குடி சென்று அங்குள்ள ஹவுசிங்போர்டு காலனியில் வசித்துவரும் புரோக்கர்கள் சுந்தர்(35), அபுபக்கர்(52) ஆகியோரை அணுகினார். அவர் கள் தங்களிடம் உள்ள லாரியை தருவதாக கூறினர். இதைத்தொடர்ந்த அந்த லாரியை ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்திற்கு பேசி முடிக்கப்பட்டு முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்து லாரியை பெருங்குளத்திற்கு முருகன் ஓட்டிவந்தார்.
மீதிபணத்தை வாங்குவதற்காக புரோக்கர்கள் 2 பேரும் கடந்த 25ம்தேதி பெருங்குளம் வந்தனர். அவர்கள் முருகனிடம் பாக்கிபணம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ஆர்சி புத்தகத்தை கொடுத்து சென்றனர்.
இந்நிலையில் அந்த ஆர்சி புத்தகத்தை முருகன் சரிபார்த்தபோது அது 1995ம் ஆண்டுக்குரியது என தெரியவந்தது. ஆனால் புரோக்கர்கள் இவரிடம் 2005ம் ஆண்டு மாடல் லாரி என்று கூறி விற்றிருந்த னர். இதனால் சந்தேகமடைந்த முருகன் லாரியின் என்ஜின் மற்றும் ஜேசியை சரிபார்த்தார். அதில் எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தன. புரோக்கர்கள் இருவரும் தன்னை ஏமாற்றி லாரியை விற்றிருப்பதை உணர்ந்த முருகன் நேற்று ஏரல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ. பால்ஐசக் ஆகியோர் விசா ரணை நடத்தி இரு புரோக்கர்களை யும் கைது செய்தனர். முருகனிடம் விற்கப்பட்ட லாரி வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு இங்கு விற் கப்பட்டதா, அல்லது திருட்டு லாரியா? என விசாரணை நடக்கிறது.
லாரி விற்பனையில் மோசடி: 2 புரோக்கர்கள் கைது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக