துபாய்:பார்லிமென்ட்டில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி புதுடில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16-ம் தேதி அன்னாஹசாரே குழுவினர் தாங்கள் தயாரித்த ஜனலோக்பால்மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்ற வேண்டும்என வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடத்தினர். அதே சமயம் அன்னாஹசாரேவிற்கு ஆதரவு தெரிவித்து துபாயில்வசித்து வரும் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு துபாயின் போலீசிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தவர்களை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவர்கள் 12நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியதுணை தூதரகத்தை சேர்ந்த அதிகாரி சஞ்சய்வர்மா கூறுகையில் இந்தியாவில் நடைபெறும் போராட்டம் உலகில் மற்ற நாடுகளில்வாழும் இந்தியர் களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போரட்ட முறைகளை கையாளவேண்டும் என்று கூறினார். மேலும் துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக