தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்துள்ள மகாகணபதிபுரத்தை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு மகளும் உள்ளனர்.
ரஜினி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். தேவி குறி சொல்லி வாழ்க்கையை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு தனது மூத்த இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தானும் தொழிலுக்கு கிளம்பினார். வீட்டில் 1.5 வயது குழந்தை மைக்கேல் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தான்.
இந்தநிலையில் வீட்டில் ‘திடீர்‘ என்று தீப்பற்றி எரிந்தது. காற்று வீசியதாலும், வீட்டு கூரை ஓலையால் வேயப்பட்டு இருந்ததாலும் தீ மளமளவென்று பற்றி எரிந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உடல் கருகி பலியானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக