புதுடில்லி:மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், "கோடி' கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில் நேற்று முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சொத்து விவரத்தில், தமிழக அமைச்சர்களில் அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ.5.39 கோடி ரொக்கம். ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயட்டா இன்னவோ, ஸ்கோடா கார்கள். அழகிரியின் பெயரில் மட்டும் 85 கிராமும், மனைவி காந்தியின் பெயரில் 700 கிராமும், மகன் பெயரில் 50 கிராம் தங்கமும் உள்ளதாம்.விவசாய நிலங்கள்:உத்தங்குடியில் 2.56 ஏக்கர்- மதிப்பு ரூ.50 லட்சம்.கள்ளந்திரியில் 7.5 ஏக்கர்- மதிப்பு ரூ. 20 லட்சம்.சின்னாம்பட்டி 1.5 ஏக்கர்- மதிப்பு ரூ.5 லட்சம்.சிந்தாமணி பகுதியைச் சுற்றிலும்தான் நிறைய விவசாய நிலங்கள், கணக்கு காட்டப்பட்டுள்ளன. அங்கு 57 சென்ட் நிலம்- மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இன்னொரு 38 சென்ட் நிலம்-மதிப்பு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம். மற்றொரு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம்- மதிப்பு 2 லட்சத்து 64 ஆயிரம்.இதேபோல, இன்னொரு 1 ஏக்கர் 46 சென்ட்-மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரம். இன்னொரு 2 ஏக்கர் 27 சென்ட்- மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம்.
விவசாயமல்லாத இடங்கள்:மதுரை தல்லாகுளம் பகுதியில், ஒரு ஏக்கர் 44 சென்ட் நிலப்பரப்பு- மதிப்பு ரூ.60 லட்சம். திருப்பரங்குன்றத்தில், 12 சென்ட் நிலப்பரப்பு-ரூ.4 லட்சம். மாடக்குளத்தில் 26 சென்ட் நிலப்பரப்பு- ரூ.29 லட்சம். பொன்மேனி பகுதியில் ஆறு கிரவுண்ட் பரப்பு நிலம்-மதிப்பு ரூ.90 லட்சம். சத்யசாயி நகர் வீடு 20 சென்ட் பரப்பளவு- ரூ.60 லட்சம். சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம்- 1,100 சதுரஅடி பரப்பு-மதிப்பு ரூ.22 லட்சம். மதுரை நாராயணபுரம் ஜாஸ் டவர்ஸ் பிளாட் வீடு ரூ.12 லட்சம். மொத்தத்தில் அழகிரிக்கு ரூ.12.88 கோடிக்கு சொத்து உள்ளது.
இவையெல்லாம் அழகிரியின் பெயரில் கணக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் என்ற நிலையில், மனைவி காந்தியின் பெயரில் அமைந்த சொத்து மதிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.10 லட்சம். சேமிப்பு கணக்கில் ரூ.38 லட்சத்து 73 ஆயிரத்து 183. கரன்ட் அக்கவுன்ட்டில் ரூ.14 லட்சம்.
இவையெல்லாம் அழகிரியின் பெயரில் கணக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் என்ற நிலையில், மனைவி காந்தியின் பெயரில் அமைந்த சொத்து மதிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.10 லட்சம். சேமிப்பு கணக்கில் ரூ.38 லட்சத்து 73 ஆயிரத்து 183. கரன்ட் அக்கவுன்ட்டில் ரூ.14 லட்சம்.
காந்தி சில்க்ஸ் முதலீடு ரூ.70 லட்சம். தயா கல்யாண மகால்- மதிப்பு ரூ.13 லட்சம். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் 5,500 சதுர அடியில் வீடு-மதிப்பு 4 கோடியே 39 லட்சம். ஐயன் பாப்பாக்குடியில் 3,000 சதுர அடி நிலம்-மதிப்பு 2 லட்சம்.மகன் தயாநிதியின் பெயரில் காட்டப்பட்டுள்ள சொத்து விவரங்களை பார்க்கும்போது, சென்னை திருவான்மியூரில் 4,000 சதுர அடி பிளாட் வீடு-மதிப்பு ரூ.36 லட்சம். மயிலாப்பூர் பீமண்ண முதலி தெருவில் 8,160 சதுர அடி வீடு - ரூ.2 கோடி. சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீடு 50 சென்ட்- ரூ.1.5 கோடி. கோடைக்கானல் பர்ன்ஹில் சாலையில் 60 சென்ட் நிலத்தில் பங்களா- மதிப்பு ரூ.68 லட்சம். மேற்கண்ட தகவல்கள் அமைச்சர் அழகிரியின் பெயரில் இடம்பெற்றுள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்புகள் எல்லாமே எந்த அடிப்படையில் போடப்பட்டுள்ளன என்பது புரியவில்லை. அரசு மதிப்பா, சந்தை மதிப்பா என்பது தெரியவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தன் பங்கிற்கு ரூ.11 கோடி வரை சொத்துக்கணக்கு காட்டியுள்ளார். கர்நாடகாவில் குடகு பகுதியில் காபி எஸ்டேட்-ரூ.29 லட்சம் மதிப்பு என்று கூறியுள்ளதோடு, ரூ.34 லட்சம் அளவில் பிற சொத்துக்கள் என்ற பெயரில் கணக்கு கூறியுள்ளார். பங்குச் சந்தையில் ரூ.57 லட்சம். பொதுவைப்பு நிதியாக ரூ.6 லட்சத்து ரூ.92 ஆயிரம். அஞ்சல வைப்புநிதியாக ரூ.19 லட்சம். நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2 கோடியே 15 லட்சம். சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1,239 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா, போர்டுபியஸ்டா கார்கள் வைத்துள்ளார். நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள பங்களா.சிதம்பரத்தின் மனைவி நளினியின் பெயரில், ரூ.10 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இன்னொரு அமைச்சர் வாசனோ, தனக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கமும், மனைவி சுனிதாவுக்கு ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட 10 காரட் வைரமும், ரூ.5 லட்சத்து 400 மதிப்பு கொண்ட 27 கிலோ எடையுள்ள வெள்ளியும் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க பிரதமர் முடிவு செய்தார். இதற்காக, மத்திய அமைச்சர்கள் இந்த ஆண்டு தங்கள் சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் மற்றும் 71 அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தனர். பிரதமர் உள்பட 72 பேரின் சொத்து பட்டியல்கள், பிர தமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதில் பணக்கார அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கமல்நாத் மொத்தம் ரூ.263 கோடி சொத்துகள் உள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், ஸீ2.7 கோடிக்கு வங்கி டெபாசிட்கள், சண்டிகரில் ஸீ90 லட்சத்தில் வீடு, டெல்லியில் ஸீ88 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 1996ம் ஆண்டு மாடல் மாருதி 800 கார் வைத்துள்ளதாகவும், மனைவி கவுரின் சேமிப்பு கணக்கில் ஸீ11 லட்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஸீ11.15 கோடிக்கும், மனைவி நளினி சிதம்பரத்துக்கு ஸீ12.34 கோடிக்கும் சொத்துகள் மற்றும் 4 கார்கள் உள்ளதாக கூறியுள்ள £ர். விவசாய அமைச்சர் பவார் ஸீ12 கோடி, தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் ஸீ20 கோடி, பிரணாப் முகர்ஜி ஸீ3 கோடி என்று சொத்து விவரம் அளித்துள்ளனர்.
குறைந்த பட்சமாக, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தனக்கு அசையா சொத்துகளே இல்லை என்றும், தன்னிடம் ஸீ1.8 லட்சம் சேமிப்பும், மனைவிக்கு ஸீ30 லட்சம் சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார். தகவல் தராத 5 பேர்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கேபினட் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணா டிராத், இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், ஜிதேந்திர சிங் ஆகிய 5 பேர் மட்டும் இன்னும் சொத்து விவரங்களை பிரதமரிடம் தாக்கல் செய்யவில்லை. முக்கிய அமைச்சர்கள் சொத்து பட்டியல்:
பிரதமர் சொத்து
பிரதமர் மன்மோகன் சிங்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 4,498 சதுரடி மனையில் 2,907 சதுரடி கொண்ட 2 அடுக்கு மாடி வீடு & மதிப்பு ரூ90 லட்சம். டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ரூ88.67 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு. விவசாய நிலம் எதுவுமில்லை. பல்வேறு வங்கிகளில் ரூ3.22 கோடி டெபாசிட், சேமிப்பு. 1996ல் வாங்கிய மாருதி &800 கார் & மதிப்பு ரூ24,745. மனைவி குர்சரண் கவுர் பெயரில் சண்டிகர் வங்கியில் ரூ11 லட்சம் டெபாசிட். தங்க நகைகள் 150.8 கிராம் & மதிப்பு ரூ2.75 லட்சம். மொத்த சொத்து மதிப்பு ரூ5.11 கோடி.
வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா:
ரூ31 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் விவசாய நிலங்கள், 2 கார், ரூ50 ஆயிரம் மதிப்பில் நகைகள். ரூ3 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ27 லட்சம். தொழிலில் ரூ88 லட்சம் முதலீடு. மனைவிக்கு ரூ2.21 கோடி சொத்து, ரூ14 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ8.42 லட்சம்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம்:
ரொக்க கையிருப்பு: ரூ4,574,324
வங்கி டெபாசிட்: ரூ12,907,699
பங்குகளில் முதலீடுகள்: ரூ9,129,955
குடகுமலையில் காபி எஸ்டேட் மதிப்பு ரூ2,894,579
ஸ்கோடா, போர்டு பியஸ்டா, வோக்ஸ்வேகன் கார்கள்.
மொத்த சொத்துகள் : ரூ111,585,090
மனைவியின் சொத்துகள்: ரூ123,477,967
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி:
மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ90 லட்சத்தில் 3 விவசாய நிலம். சுமார் ரூ2 கோடி மதிப்பில் 5 பிளாட்கள். ரூ1.13 கோடி மதிப்பில் 4 வீடுகள். தொழிலில் ரூ1.28 கோடி முதலீடு, வங்கியில் ரூ2 லட்சத்து 26 ஆயிரம் சேமிப்பு. இரண்டு கார். ரூ1.42 லட்சம் மதிப்பில் 85 கிராம் தங்க நகை. மனைவி பெயரில் 3 இடங்களில் சுமார் ரூ37 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்கள், ரூ5.83 கோடியில் 4 பிளாட்கள், ரூ25 லட்சம் மதிப்பில் வீடு. ரூ1.33 கோடியில் வர்த்தக கட்டிடம். வங்கியில் ரூ1.25 லட்சம் சேமிப்பு, 2 கார், ரூ1.95 கோடியில் தங்க மற்றும் வைர நகைகள்.
ஜி.கே.வாசன் (கப்பல் போக்குவரத்து அமைச்சர்):
சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் ரூ18.75 லட்சம் மதிப்புள்ள 4ல் ஒரு பங்கு சொத்து. கும்பகோணம் பெசன்ட் சாலையில் 4ல் ஒரு பங்கு வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடம் & மதிப்பு ரூ1.40 கோடி. கபிஸ்தலம் கிராமத்தில் ரூ7.33 லட்சம் மதிப்புள்ள 7.33 ஏக்கர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ70,000 மதிப்புள்ள 0.14 ஹெக்டேர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ4.41 லட்சம் மதிப்புள்ள 0.13.5 ஹெக்டேர் வீட்டுமனை. ரூ7.06 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் நகை. வங்கியில் சேமிப்பு ரூ18.39 லட்சம். மனைவி சுனிதா வாசனுக்கு 750 கிராம் நகைகள் & மதிப்பு ரூ13.23 லட்சம். 10 காரட் வைர நகை & மதிப்பு ரூ4 லட்சம். வெள்ளி மற்றும் இதர பொருட்கள் ரூ15.36 லட்சம். மகன் பிரணவுக்கு 100 கிராம் நகைகள் & மதிப்பு ரூ1.76 லட்சம்.
நிதித்துறை அமைச்சர்
பிரணாப் முகர்ஜி:
டெல்லி, கொல்கத்தாவில் தலா ஒரு பிளாட் வீடு உள்ளது. இதன் மதிப்பு, ரூ50 லட்சம். மேலும் மேற்கு வங்காளத்தில் பீர்பம் மாவட்டத்தில் பூர்வீக சொத்து உள்ளது. 2000ம் ஆண்டில் வாங்கிய போர்டு கார் ஒன்றும் வைத்துள்ளார். இது தவிர வங்கிகளில் ரூ50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி சுர்வாவுக்கு ரூ1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள 5 வீடுகளும், விவசாய நிலமும் உள்ளது. ரூ22 ஆயிரம் மதிப்புள்ள பழைய அம்பாசிடர் காரும் வைத்துள்ளார். ரூ31 லட்சம் மதிப்புள்ள 1,395 கிராம் தங்க நகைகள் மற்றும் வங்கியில் ரூ21 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக