புதன், 31 ஆகஸ்ட், 2011

patti 1

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லீம் பெருமக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது அன்பினையும், மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் இனிப்புகளை வழங்கினர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோச்பூங்காவில் நேற்று காலை நடந்த சிறப்பு தொழுகையிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலாணி தெரு, புதுத்தெரு, முத்தம்மாள்காலணி, ஜாகீர் உசேன்நகர் போன்ற இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டிணம், கயத்தாறு, பேட்மாநகரம், கோம்பலாபாத், ஆழ்வார்திருநகரி, உடன்குடி, ஆறுமுகநேரி, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம்,செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் EID


தூத்துக்குடி, காயல்பட்டினத்தில்
தூத்துக்குடி, அக். 31&
தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பல்வேறு மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
தூத்துக்குடி ஜாமியாபள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல்ஆலிம் தலைமை வகித்து தொழு கை நடத்தி வைத்தார். இதில் பள்ளிவாசல் தலை வர் மீரான், இந்திய யூனி யன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் மீராஷா, மாநகர தலைவர் சகாபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகர், ஜூம் மா பள்ளிவாசலில் இமாம் ரசூல்நிசார் தலைமையில் சிறப்புத் தொழுகை நடந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்ட னர். இதுபோல் திரேஸ் புரம் ஜாமியா பள்ளிவாசல், முத்தையாபுரம் பெரியபள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது.
தூத்துக்குடி ரோச் பூங்காவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்கள், பெண்கள் குடும்துடன் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை நடந்தத. இதில் 400க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் அப் பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அன்சாரி பேசினார்.
மேலும் பெண்களுக்கு தனியாக தெற்குபுதுத்தெருவில் உள்ள ஷாமியா சமுதாயநலக் கூடத்திலும், ஜாமியா சமுதாய நலக் கூடத்திலும், ஜெய்லானி தெருவில் உள்ள பீர்முகமது தைக்கா அப்பா பள்ளிவாசலிலும், பீர்முகமது அப்பா தைக்காவிலும் தனியாக தொழுகை நடந்த

நெல்லை மாவட்டத்தில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை


நெல்லை மாவட்டத்தில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை
தென்காசி, ஆக. 31&
தென்காசி, கடையநல்லூர், பொட்டல்புதூர், புளியங்குடி, பத்தமடையில் ரம்ஜான் நோன்பு பெரு நாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில்சிறப்புதொழுகை நடந்தது.
தென்காசியில் இன்று காலை 7.30 மணிக்கு ரம்ஜான் பெரு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காட்டு பாவா பள்ளிக்கூடத்திடலில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் சுலைமான் தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது.
தென்காசி முஸ்லிம் ஜமாத் சார்பில் வி.டி.எஸ்.ஆர்.மஹாலில் அப்துல்ரகுமான் ஷிப்லி தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முகம்மது அலி, ரபிக்பின்உசேன்,ஹாஜா உட்படஏராளமான பெண்கள்கலந்து கொண்டனர்.
தென்காசி நடுப்பேட்டை முகைதீன் ஜூம் ஆ பள்ளிவாசல், ஐந்துவர்ணம் பெரியபள்ளிவாசல், கடையத்தெரு இஸ்மாயில் மீயான் ஜூம்மா பள்ளிவாசல், மரைக்காயர் பள்ளிவாசல், அரிப்புகாரத் தெரு ராஜ்மீயான் பள்ளிவாசல், வேம்படி பள்ளிவாசல், சொர்ணபுரம் தெரு பள்ளிவாசல், மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் ஆகியவற்றிலும் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கடையநல்லு£ரில் ரம்ஜான் நோன்பு பெருநாளை முன்னிட்டு காயிதே மில்லத் திடலில் இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தின் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடையநல்லு£ர் காயிதே மில்லத் திடலில் காலை 6.45 மணிக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தினார். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் டவுண் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கடையநல்லு£ர் ரகுமானியபுரம் 3வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிய கல்லு£ரி பேராசிரியர் அப்துந் நாஸிர், மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் பஷீர் அகமது ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது.
பொட்டல்புதூர், பத்தமடை, புளியங்குடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது.
புளியங்குடி மேலப்பள்ளிவாசலில் கலீல்ரகுமான் ஆலிம் தலைமையில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஜமாத் கமிட்டி தலைவரும், நகராட்சி சேர்மனுமான முகமது இஸ்மாயில், முஸ்லிம் லீக் நகர செயலாளர் அப்துல்வகாப், மாவட்ட பொருளாளர் காதர்மைதீன், இளைஞரணி தலைவர் லியாகத்அலி, கவுன்சிலர்கள் மைதீன்பிச்சை, சாகுல்ஹமீது, அப்துல்ரகுமான், மதிமுக நகர செயலாளர் சாகுல்ஹமீது, அதிமுக நகர அவைத்தலைவர் முகமது உசேன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல்ஹமீது, ஆடிட்டர் பீர்முகமது, முஸ்லிம் நல அறக்கட்டளை பொதுத்தலைவர் செய்யதுசுலைமான், லயன்ஸ் கிளப் பொருளாளர் பீர்முகமது உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி கீழப்பள்ளிவாசலில் மீராஷாஆலிம் தலைமையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் அலாவுதீன், டாக்டர் அசன் இப்ரா ஹிம், கவுன்சிலர் ஜாகீர்உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி மஜூத்தூர் ஆலம் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் காஜாமைதீன், மேற்கு பகுதி விவசாய சங்கத் தலைவர் யுனூஸ் உட்பட கலந்து கொண்டனர்.
புளியங்குடி தவ்ஹீத்ஜமாத் சார்பில் கிரசன்ட் ஆங்கிலப்பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்புத் தொழுகைக்கு அறக்கட்டளைத் தலைவர் முகமதுஅலி தலைமை வகித்தார். இதில் யாசீர் பிரதவுசி ஆலிம் பங்கேற்று சிறப்புத் தொழுகையை நடத்தினார்.
இந்த தொழுகையில் அறக்கட்டளை செயலாளர் அப்துல்ரகுமான், பொருளாளர் பஷீர்ஒளி, தமுமுக நகர தலைவர் முகைதீன், துணைத் தலைவர் ரஹ்மத்ஷாஜகான், பொருளாளர் மைதீன், மமக துணைச் செயலாளர் ரபீக் உட்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் காயிதேமில்லத் பள்ளி அருகில் நடந்த சிறப்புத் தொழுகையில் செய்யதுஅலி, முகமதுஅலி பிலால், தாஜ் முகமது யூசுப் மற்றும் நிர்வாகிகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் வேதானூர் இஸ்மாயில், சிங்கப்பூர் ஆலிம்ஷா, முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஜின்னா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முகமது உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி
சிவகிரி விஸ்வநாதப்பேரியிலுள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. அருளாட்சி பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் முசிபுல்லாக் ஆலிம் தலைமை வகிததார். இதில் ஜமாத் தலைவர் ஷேக்தைமீன் மரைக்காயர், முஸ்லிம் லீக் தலைவர் மீரான் மரைக்காயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாம்புக்கோயில் ச ஜூம்மா மசூதியில் ராஜாமுகைதீன் ஆலிம் தலைமையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் த்ட்டாதி என்று முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டார்.

eid

இனிமை பொங்கும் ஈத் பெருநாள்

Current events





இஸ்லாம் என்ற அரபு வார்த்தைக்கு, அமைதி, சமாதானம் என்ற பொருள்கள் உண்டு. இஸ்லாம் பிறந்து 1389 வருடங்கள் ஆகிவிட்டன. மூடநம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி பின்பற்றி வந்த ஆதி அரபு மக்களை தனியாக நின்று எதிர்த்து போராடி, இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற கொள்கையை வகுத்து இஸ்லாம் என்று பெயரிட்டு இவ்வுலகத்திற்கு தந்தவர் முகமது நபி (ஸல்) ஆவார்.இன்று இக்கொள்கையை உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கின்ற 157 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்தின் மொத்த ஜனத்தொகை 680 கோடியில். 23 சதவீதம் முஸ்லிம்கள். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 18 கோடி மக்கள் இஸ்லாமியர் என்று நீதியரசர் சாச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.
இஸ்லாம் ஒரு பெரிய மாளிகை. இந்த மாளிகையை ஐந்து கொள்கைகள், ஐந்து தூண்களாக நின்று தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவையாவன:
1. ஆண்டவன் ஒருவன். அவனை அல்லாஹ் என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திருத்தூதர் முகமது நபி (ஸல்)
2. ஐந்து நேரம் தொழ வேண்டும்.
3. ரம்ஜான் மாதம் 30 நாட்களும் நோன்பு வைக்க வேண்டும்.
4. ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் கண்டிப்பாக தர்மம் செய்ய வேண்டும்.
5. முஸ்லிம்களில் முடிந்தவர்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்கா சென்று காபாவை தொழுது வரவேண்டும்.

இஸ்லாத்திலும், மற்ற சமயங்களைப் போல 12 மாதங்கள் உண்டு. ஒரு மாதம் 29 இரவுகளைக் கொண்டது. சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன சந்திர இயக்க மாதங்களில் 9வது மாதமான ரம்ஜான் மிகச் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது என்பர். ரம்ஜான் என்றால் "எரி' என்று பொருள். ரம்ஜான் மாதம் மிகவும் சூடான (காய்ந்து எரியும்) மாதம். அதுமட்டுமல்லாது மனிதர்கள் அதுவரைக்கும் செய்த பாவங்களை எரித்துவிடும் என்றும் சொல்வர். ரம்ஜான் மாதத்தை ரமலான் என்றும் "ரமதான்' என்றும் சொல்லலாம். இந்த மாதத்தின் கடைசி 10 நாட்கள் சிறப்புடையதாகக் கருதப்படும். ஏனென்றால் இந்த 10 
நாட்களில் ஏதோ ஒரு இரவில் தான் திருக்குர் ஆனை அல்லாஹ் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கினான் என்பர்."குர்ஆன்' என்ற அரபு வார்த்தைக்கு "படி' என்று பொருள்.

ரம்ஜான் நோன்பு முடிந்த அடுத்த ""பெருநாள்'' என்றும், ""ஈத் பெருநாள்'' என்றும் சொல்வர். 
புத்தாடை உடுத்தி, பலகாரங்களும், உணவு வகைகளும் செய்து, நண்பர்களுடன் கூடி உண்டு 
மகிழ்வர். உற்றார் உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து கட்டி அணைத்து (முலாக்கத்) மகிழ்வர். ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வர். மாற்று மதத்தினரையும் இனத்தவரையும் வீடுகளுக்கு அழைத்து விருந்து கொடுப்பர்.

அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட, இன்னொருவரைப் பார்க்கும்போது ""சலாம் அலைக்கும்'' என்பர். அதன் பொருள் ""உங்களிடம் அமைதி உண்டாகட்டும்''என்பதாகும். இஸ்லாம் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் நிற்கின்ற மார்க்கம். இங்கே வன்முறைக்கும் பயங்கர
வாதத்திற்கும் இடமில்லை. இவ்விதச் செயல்களில் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை.மார்க்கத்தில் இஸ்லாமியர், தேசத்தில் இந்தியர், இந்தியா நமது நாடு என்ற உணர்வோடும், குர்ஆனில் வலியுறுத்தி சொல்லப்படுகின்ற ""லக்கும் தீனுக்கும் வலியதீன்'' அதாவது ""அவர்களுக்கு அவரவர் வழி'' என்ற இலக்கணத்திற்கு உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ்கிறார்கள்


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ரமலான் சிறப்பு தொழுகை


காயல்பட்டினம், ஏர்வாடியில் இன்று
ரமலான் சிறப்பு தொழுகை
ஆறுமுகநேரி, ஆக. 30&
காயல்பட்டினம் கடற் கரையில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரமலான் பண்டிகையொட்டி காயல்பட்டினம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடந்தது. அல் ஜாமி வுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி இமாம் நெய்னா முகம்மது சிறப்பு தொழுகையை நடத்தினார். அல் ஜாமி வுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி கத்தீபு அப்துல் மஜித் மஹ்ழரி குத்பா பேரூரை நிகழ்த்தினார்.
சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணைய தலைவர் தஸ்தஹீர், செயலாளர் வக்கீல் மீராசாகிப், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத்தலைவர்கள் அபுல் ஹஸன் கலாமி, அபூபக்கர், இப்னு சவூது, துணை செயலாளர் நவாஸ், துணை பொருளார் கியாது சேட், அன்னை கதீஜா மதர்ஷா நிர்வாகி மாஷா அல்லா செய்யது முகம்மது, கரூர் அசேன், இந்திய யூனியன் முஸ்லீம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்துல் வாஹித், தேமுதிக மாவட்ட செயலார் அகமது உசேன், தமுமுக நகர தலைவர் ஜாஹீர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏர்வாடியில் இன்று ரமலான் பண்டிகை ஜாக் அமைப்பினர் கொண்டாடினார்கள். பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். காலை 7 மணிக்கு அல்ஹூதா மெட்ரிக்ப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் பள்ளியின் இமாம் அப்துல் ரஷூத் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்.

நோன்புத் திருநாளின் பெருமைகள்

ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

ஐவகை கடமைகள்

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(ரமலான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

இறைதூதர் அளித்த நாள்

முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும். பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவ்விரண்டு திருவிழாக்களுக்கும் பதிலாக சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளார். அவை குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!, மற்றொன்று ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்! என்று அறிவித்தார்கள்.

நோன்பின் மகிமை

ஒன்றும் இல்லாமல் பட்டினி கிடப்பது வேறு. பசியின் கொடுமையை உணரவேண்டும் என்பதற்காகவும், அகந்தை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயரவேண்டும் என்பதற்காகவுமே ஒருமாத காலம் பசியோடு நோன்பிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமை என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளே ஈகைத் திருநாள். ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை ரமலான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என இறைவனால் வழங்கபட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

தானத்தினால் ஏற்படும் இன்பம்

"ஈதல்' என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர்தாம், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர் என்பதையே வள்ளுவர்

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.” என்று கூறியுள்ளார். இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரும், வழங்குபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வழிகோலும்.

ஈகை கொடுத்தல்

பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

"மனித நேயம்" என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்கச் சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல் நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று! மனம் விரும்பிய உணவை ரசித்து சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஈகையின் கடமை

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் வேண்டிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் ஈதுல் ஃபித்ர் அல்லது ஈகைப்பெருநாள் என அழைக்கப்படுகிறது


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

குவைத்தில் கீழ்காணும் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை

குவைத்தில் கீழ்காணும் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. முக்கியமாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் குவைத்தில் பணி புரிகிறவர்களாகவும் விசா டிரான்ஸ்பர் செய்ய கூடியவர்களாகவும் ஒரு மாதத்தில் பணிக்கு சேர கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை fiverose@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பவும்

Electrical Technicians-  05 Nos. minimum experience 6 yrs
Office Boys or Help desk executive-06 No.....10 or 10+2 just little knowledge of Computer.

Salary- 200 KD + transportation.
Planning Co-ordinator- minimum 6 years experience in Oil & Gas
HVAC Engineer- Plumbing & Fire Fighting with minimum 6 years experience
All the above candidates shall have transferable visa and can join immediately or within One month notice.

Ramzan Special | ரமலான் நோன்பின் சிறப்பு Dinamalar

Ramzan Special | ரமலான் நோன்பின் சிறப்பு Dinamalar

மாவட்டங்கள் » தூத்துக்குடி



மாவட்டங்கள் » தூத்துக்குடி

முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்