தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பள்ளிவாசல் காம்ப வுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் சங்கர்(வயது24). ஆட்டோ டிரைவரான சங்கர், பவித்ரா(18) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தாலும், சங்கரின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. இதனால் திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி இருவரும் ஏரலிலேயே தனக் குடித்தனம் நடத்தினர்.
இந் நிலையில் கடந்த 23-ந்தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற சங்கர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லாததால், தனது கணவர் மாயமானது குறித்து ஏரல் போலீஸ் நிலையத்தில் பவித்ரா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிந்து மாயமான சங்கரை தேடிவருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக