ஏரல்:ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. ஆலய திருவிழா நாளை(28ம் தேதி) நடக்கிறது.ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு ஆலயத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் பார்பரம்மாள்புரம் பங்குத் தந்தை விக்டர் சாலமன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பங்குத் தந்தைகள் அலாய்சியூஸ், செல்வ ஜார்ஜ், கனகராஜ் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை திருவிழா ஆராதனை நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. நவநாட்களில் காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை பீட்டர் ஊர் தலைவர் அந்தோணிசாமி மற்றும் ஊர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக